Posts

Showing posts from May, 2018

விடியும் நாள் வரைக்கும்

Image
இந்நூல் எமது பதிப்பகத்தின் முதல் வெளியீடு. மின்னூலாகவும் கிடைக்கிறது.      விடியும் நாளைத் தேடும் சின்னானூர் எனும் சிறு கிராமத்தைப் பற்றிய கதை இது. அவ்விடத்து மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறைகளோடு கதையின் பயணம் தொடர்கிறது. இது இளைஞர்களை மையமாக கொண்ட கதை. விவசாயத்தை முன்னிலைப் படுத்தி - விவசாயத்திற்கு தடையாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரறுக்க இளைஞர்கள் போடும் திட்டம் - தினக்கூலி தன் கூலித்தொகையில் ஒரு பகுதியை மதுவிற்காக செலவளிக்க, அதனால் அவன் குடும்பம் வளராமல் பின்தங்குவதை உணர்த்தியும் - புதுவகை குழந்தை  தொழிலாளர் திட்டத்தை முன்னிலைப்படுத்தும் வியாபாரி - அதனை மீறமுடியாமல், மீளத்தெரியாமல் இருக்கும் தீக்குச்சி அடுக்கும் தொழிலாளிகள் - வயதில் பெரியோர்கள் 'இளைஞர்களுக்கு' பக்கபலமாக இருப்பது – அரசின் சட்டங்களை மதிக்கும் கிராமத்தில், அதனை உதாசீனப்படுத்திய ஒரு குடும்பம்; அதனால் பட்டபலன் - கடைசியாக இளைஞர்களின் எழுச்சி! என இந்நாவல் நீளுகிறது.      இது ஒரு சிறுகிராமத்தின் கதையாக இருந்தாலும், கிட்டத்தட்ட ஒன்பது குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை முன்னிறுத்தியே கதை நகர்